பிரிட்டனின் கப்பலை கைப்பற்ற முயன்ற ஈரானிய படகுகள்! பராசீக வளைகுடாவில் ஏற்பட்ட பதற்றம்

Report Print Murali Murali in உலகம்

பராசீக வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த பிரிட்டனின் எண்ணெய்க்கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சி செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையணியின் படகுகள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை இடைமறித்து கைப்பற்ற முயன்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் ஹெரிட்டேஜ் என்ற எண்ணெய்கப்பல் பாரசீக வளைகுடாவிலிருந்து ஹார்முஸ் ஜலசந்திக்கு செல்ல முயன்றவேளை ஈரானிய படகுகள் அந்த கப்பலை நோக்கி சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகிலிருந்தவர்கள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை பாதை மாறி பயணிக்குமாறும் ஈரானின் கடல்பகுதிக்கு செல்லுமாறும் உத்தரவிட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அந்த பகுதியின் மேலாக பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க விமானமொன்று அதனை படம் பிடித்துள்ளது.

இதேவேளை ஈரானின் எண்ணெய் கப்பலிற்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த பிரிட்டனின் கடற்படை கப்பலான எச்எம்எஸ் மொன்டிரோஸ் ஈரானிய படகுகள் மீது தனது துப்பாக்கி திருப்பி கடும் எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை மூன்று ஈரானிய படகுகள் சர்வதேச சட்டத்திற்கு முரணாக பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்ற முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரிட்டனின் போர்க்கப்பல் ஈரானிய படகுகளிற்கும் பிரிட்டனின் எண்ணெய்கப்பல்களிற்கும் இடையில் நுழைந்து ஈரானிய படகுகளிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்ததாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

நாங்கள் இந்த சம்பவத்தினால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் அந்த பகுதியில் பதட்டத்தை குறைக்குமாறு ஈரானை கேட்டுக்கொள்கி;ன்றோம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Latest Offers