மலேசியாவில் வெளிநாட்டினர் பலர் கைது!

Report Print Murali Murali in உலகம்

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் உள்ள ஜாசின் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக பணியாற்றியதாக 92 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் வங்கதேசம், இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என மலாக்கா மாநில துணை குடிவரவு இயக்குனர் அஸ்மான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவர்களை பாதுகாத்து வைத்திருந்ததாக 28 வயதுடைய மலேசிய மேலாளரும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

“முறையான பயண ஆவணங்களின்றி நீண்ட காலம் தங்கி இவர்கள் வேலை செய்து வந்துள்ளனர்,” என துணை குடிவரவு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைக்கு இவர்கள் அனைவரும் Machap Umboo தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட இவ்வாறு கைது செய்யப்படும் வெளிநாட்டினர் தடுத்து வைப்பதற்கு மலேசியா எங்கும் 14 குடிவரவ தடுப்பு மையங்கள் உள்ளன.

மலேசிய குடிவரவுத்துறையின் கணக்குப்படி, கடந்த எட்டு மாதங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 41,041 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.