புதிய ஜனாதிபதியை பலமாக நம்பும் ஈரான்

Report Print Banu in உலகம்

கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாகியுள்ளதால் ஈரானுக்கும் இலங்கைக்குமான உறவு மேலும் விரிவடையும் என நம்புவதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையத் அப்பாஸ் மௌசவி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர்,

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு இலங்கையை வாழ்த்துகிறது.

அனைத்து தரப்பு மக்களும் முழு அமைதியுடனும், ஆதரவுடனும் ராஜபக்சவை பெரும்பான்மையான வாக்குகளை வழங்கி நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் விளைவாக, புதிய சகாப்தத்தில் இரு நாடுகளின் நலன்களுக்கு ஏற்ப இருதரப்பு உறவுகள் ஆழமடைந்து வளரும் என்ற நம்பிக்கை எனக்கு வெகுவாக காணப்படுகின்றது என்று அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.