மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத்தண்டனை!

Report Print Murali Murali in உலகம்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அவரது ஆட்சிகாலத்தில், நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட ஒரு மில்லியன் டொலர் பணத்தை தமது கணக்கில் வைப்பு செய்த சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவரது ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் அபிவிருத்திக்காக தீவுகள் பலவற்றை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட்டதன் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து, ஐந்து பேரடங்கிய விசாரணை குழு, விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அப்துல்லா யமீன் இந்த பணத்தை பெற்றுக்கொண்டமை உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனையும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.