மனித கடத்தலில் சிக்கும் ஏழ்மை நாடுகளின் தொழிலாளர்கள்!

Report Print Murali Murali in உலகம்

கடந்த 2019ம் ஆண்டில், மனித கடத்தலில் சிக்கிய 1,807 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாய்லாந்தில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு எண்ணிக்கை, 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகமாக காணப்படுகின்றது.

2018ம் ஆண்டில் மனித கடத்தலில் சிக்கி மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 622 ஆக இருந்துள்ளது.

2019ம் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதமானோர் பெண்கள் என்றும் அவர்களிடமிருந்து உழைப்பை பெறும் நோக்கத்தில் கடத்திவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது தாய்லாந்து காவல்துறை.

இதில் பெரும்பாலானோர் மலேசியாவுக்கு செல்ல முயற்சிக்கும் மியான்மர் குடியேறிகள் எனச் சொல்லப்படுகின்றது.

பில்லியன் கணக்கிலான டொலர்கள் பணம் புழங்கும் கடல் உணவுத்துறையில் நடக்கும் கடத்தல் சம்பங்கள் மற்றும் பாலியல் வியாபாரத்தை தாய்லாந்து அரசு கட்டுப்படுத்த தவறுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சமீப ஆண்டுகளாக கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது தாய்லாந்து அரசு. ஐ.நா.வின் கணக்குப்படி, தாய்லாந்தில் சுமார் 49 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.

அந்நாட்டின் உழைப்புச் சக்தியில் 10 சதவீதமாக உள்ள இவர்கள் அருகாமையில் உள்ள ஏழ்மை நாடுகளான மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாமிலிருந்து தாய்லாந்துக்கு இடம்பெயர்ந்தவர்களாவர்.

அதே சமயம் உலக அடிமைத்தன குறியீட்டு அட்டவணையின் படி, ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட நவீன கால அடிமைகள் தாய்லாந்தில் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

Latest Offers

loading...