ஈரானிய ஏவுகணையினால் உக்ரெய்னின் பயணிகள் விமானம் சுட்டு விழுத்தப்பட்டதற்கான சான்று இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அறிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று உக்ரெய்னின் பயணிகள் விமானம் சுட்டு விழுத்தப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் கூறுகையில்,
தமது புலனாய்வு தரப்பு மற்றும் ஏனைய நாடுகளின் தகவல்களின்படி இந்த விமானம் ஈரானின் ஏவுகணையின் மூலமே சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்து விபத்துக்குள்ளானது என்று கூறப்பட்டது.
இதில் பயணித்த 63 கனேடியர்கள் உட்பட்ட 180 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க செய்மதி தரவுகளின்படி குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் வான்பரப்பில் ஈரானின் இரண்டு ஏவுகணைகள் ஏவப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும் விமானம் சுட்டு விழுத்தப்பட்டதாக கூறப்படும் செய்தியை ஈரான் மறுத்துள்ளது.
இந்த நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாக தமது அதிகாரிகளை ஈரான் தமது நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என கனேடிய அரசாங்கம் கோரியுள்ளது.