மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 பேர் கைது

Report Print Murali Murali in உலகம்
38Shares

மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்ரேஷன் Gasak என்ற இத்தேடுதல் நடவடிக்கையில் மலேசியாவின் பல்வேறு பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

575 பேர் பரிசோதிக்கப்பட்டதில் முறையான ஆவணங்களின்றி இருந்ததாக கருதப்பட்ட 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 17 பேர் கைதாகியுள்ளனர்.

இவர்கள் Tawau என்ற பகுதியில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.