ஐக்கிய நாடுகள் முன்றலில் சவேந்திர சில்வாவிற்கு ஆதரவாக ஈழத்தமிழருடன் முறுகலில் ஈடுபட்ட குழுவினர்

Report Print Banu in உலகம்

ஐக்கிய நாடுகள் முன்றலில் சவேந்திர சில்வாவிற்க்கு ஆதரவு தெரிவித்து ஈழத்தமிழருடன் இலங்கையைச்சேர்ந்த குழுவினர் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் முன்றலுக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த குழுவினர் அங்கு வருகை தந்திருந்த ஈழத்தமிழருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர்.

இதன் போது அக் குழுவினர், இன அழிப்பை செய்தது பிரபாகரனே என்றும், அங்கு காட்சிபடுத்தபட்டிருந்த ஏனைய படங்களுடன் எதற்காக கருணாவின் படத்தை காட்சிப்படுத்தவில்லை என்றும் கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்க்கு பதிலளித்த தமிழர், பிரபாகரன் சிறந்த தலைவர் . இன அழிப்பைச் செய்தது மஹிந்த ராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வாவே என்று கூறியுள்ளார்.

இருந்த போதிலும் இலங்கையைச் சேர்ந்த குழுவினர் தொடர்சியாக குறித்த தமிழருடன் மஹிந்த ராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வாவை உயர்வாக பேசியுள்ளதுடன் பிரபாகரன் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களையும் முன்வைத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.