ஸ்பெய்னில் தொடரும் பரிதாபம் : கொரோனா தொற்றால் 24 மணித்தியாலங்களில் 738 மரணங்கள்

Report Print Ajith Ajith in உலகம்

கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் ஸ்பெய்னும் சீனாவை முந்தியுள்ளது.

கொரோனா வைரஸ் ஆரம்ப நாடான சீனாவில் 3285பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்மாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஸ்பெயனில் நேற்று மாத்திரம் 24 மணித்தியாலங்களில் 738பேர் பலியான நிலையில் அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3434 ஆக உயர்ந்துள்ளது.

27 ஆயிரம் பேர் அங்கு கொரோனா வைரஸூக்காக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

ஸ்பெய்னின் பிரதி பிரதமரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதேவேளை நேற்று மாத்திரம் இத்தாலியில் 683 பேர் கொரோனவைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6820 ஆக அதிகரித்துள்ளது

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 20ஆயிரம் பேர் வரை பலியாகியுள்னனர். 460000 பேர் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் குணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers

loading...