இந்தோனேசியாவிலிருந்து திரும்பிய 42 தாய்லாந்தினருக்கு கொரோனா தொற்று!

Report Print Murali Murali in உலகம்
116Shares

இந்தோனேசியாவிலிருந்து மதக்கூட்டத்திற்காக தாய்லாந்துக்கு சென்று திரும்பிய 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் Sulawesi தீவில் மார்ச் 19-22 வரை நடைபெறுவதாக இருந்த மதக்கூட்டத்திற்காக இவர்கள் சென்றிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக்கூட்டத்தை அரசு ரத்து செய்திருந்தது.

ஆனால், இக்கூட்டம் நடக்கவிருந்த இடத்திற்கு மார்ச் 17 அன்றே வெளிநாட்டினர் உள்பட 8000 பேர் வந்தடைந்திருந்தமை பெரும் சிக்கலை உருவாக்கியிருந்தது.

முன்னதாக, மலேசியாவில் இவ்வாறு நடந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற புருனே, கம்போடியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியாட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தொற்று பரவியிருந்த நிலையிலேயே, இந்தோனேசியாவில் மலேசியா போன்று நடக்கவிருந்த மதக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், இந்தோனேசியாவில் கூட்டம் நடைபெறாத போதிலும் அந்நாட்டிற்கு பயணத்தை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இக்கூட்டத்திற்கு சென்றவர்களில் 76 பேர் தாய்லாந்துக்கு சிறப்பு விமானம் மூலம் திரும்பிய நிலையில், அவர்களில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.