மருந்து கண்டுப்பிடித்துள்ளதாக அறிவித்த ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

Report Print Ajith Ajith in உலகம்

கொரோனாவுக்கு எதிராக தமது மருத்துவத்துறையினர் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 5,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 8,50,870 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 70 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளன்ர். இதனையடுத்து கொரோனாவினால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 14,128 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் பேர் 8,114 குணமடைந்த நிலையில், இதுவரை 6,50,173 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 569 பேர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் பிரேசிலும் மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.