அமெரிக்க அரசியல் தலைவர்கள் மீது சீனா பிறப்பித்த தடை! திடீரென வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்

Report Print Jeslin Jeslin in உலகம்

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உட்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது.

இந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடையை அறிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையின் மாநாட்டு அறையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான இப்படிக்கு உலகம்,