தியாகி திலீபனின் உலகளாவிய நினைவேந்தல் கூட்டத்தில் இணைய விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Report Print TGTE Canada Media in உலகம்

இலங்கையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழர்களின் நினைவேந்தும் உரிமைகளுக்கு தடை போடும் இலங்கைக்கு எதிராக, உலகத்தமிழர்கள் இணையவழியே ஒன்றுகூடி தியாகி லெப் கேணல் திலீபனை நினைவேந்தும் நிகழ்வொன்றுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்ம் ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி அமெரிக்கா, நியூயோர்க் நகரில் மதியம் 1:30 மணிக்கு அமெரிக்காவில் தொடங்க இருக்கின்ற மைய நிகழ்வினைத் தொடர்ந்து உலகப்பரப்பெங்கும் இருந்து வணக்க நிகழ்வுகள் இணையவுள்ளன.

இவ்வணக்க நிகழ்வில் தியாகி திலீபனை நினைவேந்தும் வகையில் கவிதைகள், பாடல்களை இணையவழி வழங்க விரும்பும் உலகத்தமிழர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலைக்கு முன்னராக விபரங்களை media@tgte.org என்ற மின்னஞ்சலுக்கு அறியத்தருமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து தியாகி திலீபன் முன்வைத்த அரசியலும், சமகால அரசியலும் என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கொன்று இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.