நைஜீரியாவின் வடகிழக்கு பிரதேசத்தில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட 43 தொழிலாளர்கள்

Report Print Ajith Ajith in உலகம்
292Shares

நைஜீரியாவில் வடகிழக்கு பிரதேசம் ஒன்றில் 43 வயல்களில் பணிபுரியும் தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை பைத்தியக்காரத்தனமான தாக்குதல் என்று நைஜீரிய ஜனாதிபதி விமர்ச்சித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் நெல் வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களை கொலை செய்துள்ளனர்.

போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸின் மேற்கு ஆபிரிக்க தீவிரவாதக் குழுக்கள் தீவிரமாக செயல்படும் ஒரு பிராந்தியத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது சமீபத்தில் இந்த பிரதேசத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று என சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டாள்தனமான கொலைகளால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பிரதேசத்தில் இருந்து 15 பெண்கள் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.