மலேசியாவில் அவசர நிலை பிரகடனம்!

Report Print Murali Murali in உலகம்
474Shares

மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா தொற்று மலேசியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையில் இந்த அவரச நிலை பிரகனம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இரண்டு வார கால முடக்கல் நிலை மலேசிய பிரதமாரல் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 26ம் திகதி வரை இந்த முடக்கல் நிலை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பின்னணியிலேயே தற்போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கருத்து வெளியிடுகையில்,

“கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கோ, இராணுவ ஆட்சியோ இல்லை என நாட்டு மக்களுக்கு பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், தற்சார்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவசரநிலை பிரகடனம் மீட்டுக்கொள்ளப்பட்ட பிறகு, பொதுத் தேர்தல் நடத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் பரிந்துரைத்த அவசரநிலை முன்மொழிவை மாமன்னர் அப்போது நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.