பதவியேற்க முன்னர் நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள்: - இப்படிக்கு உலகம்

Report Print Banu in உலகம்
147Shares

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க முன்னர் நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்த பின்னணியில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதப் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,