உலகளாவிய தமிழர் திருநாள் - தமிழர் பண்பாட்டை கொண்டாடுவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம்

Report Print TGTE Canada Media in உலகம்
72Shares

தரணியெங்கும் வாழும் தமிழர்களின் கொண்டாட்ட நிகழ்வாக உலகளாவிய தமிழர் திருநாள் நிகழ்வொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தாயகம் , தமிழ்நாடு, புலம்பெயர் நாடுகள் மட்டுமல்லாது தென்னாபிரிக்கா, மொரிசியஸ், மார்த்தினிக் தீவு, குவாட்லுப் தீவு, மியான்மார், மலேசியா என தரணியெங்கும் பரந்து வாழும் உலகத்தமிழர்கள் பங்கெடுக்கும் இணையவழி நிகழ்வாக இது இடம்பெறவுள்ளது.

இன்று ஐரோப்பிய நேரம் 8:00 pm, பிரித்தானிய நேரம் 7:00 pm, நியு யோர்க் நேரம் 2:00 pm இந்நிகழ்வினை www.tgte.tvவலைக்காடசியூடாக உலகத்தமிழர்கள் காணலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் திரள் நிகழ்வாக தமிழர் திருநாளினை முன்னெடுக்க முடியாபோதிலும், இணையவழி மூலமாக உலகத்தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு வாய்ப்பாக இம்முறை தமிழர் திருநாள் அமைவதோடு, உலகத்தமிர்களின் ஒருங்கிணைந்த பலமே, தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான சக்தியாக அமையுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.