அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முன்னாள் அதிபர் ட்ரம்பின் சில கொள்கை முடிவுகளை ஜோ பைடன் மாற்றியமைத்துள்ளார் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்து பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு பெய்யவேண்டிய மழை, 36 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிக்காக இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,