வன்முறையை முடிவுக்கு கொண்டுவர மியன்மார் இராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ள ஐ.நாவின் பொதுச்செயலாளர்

Report Print Banu in உலகம்
17Shares

மியன்மாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் மற்றும் வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வர மியன்மார் நாட்டு இராணுவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்ரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு மியன்மார்இராணுவத்தினருக்கு இன்று அழைப்பு விடுக்கிறேன். கைதிகளை விடுவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

சமீபத்திய தேர்தல்களில் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் விருப்பங்களுக்கு அமைய மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள். எங்கள் நவீன உலகில் சதித்திட்டங்களுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.